search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தரப்பு தொடர்"

    3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம்.
    டுப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து, வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 130 ரன்னில் அவுட்டானார். அவருக்கு கேப்டன் போர்ட்டர்பீல்டு 
    நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது.

    வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத் 5 விக்கெட்டும், மொகமது சல்புதின் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தமிம் இக்பால் 57 ரன்னும், லித்தான் தாஸ் 76 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 50 ரன்னும் எடுத்தனர்.

    நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    மூன்று நாடுகள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது வங்காள தேசம்.

    டுப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஹோப் 87 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 62 ரன்னும் எடுத்தனர்.

    வங்காள தேசம் சார்பில் மு‌ஷடாபிசுர் ரகுமான் 4 விக்கெட்டும், மொர்டசா 3 விக்கெட்டும், சகிப் அல்-ஹசன், மிராஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. முஷ்பிகுர் ரகீம் 63 ரன்னும், சவுமியா சர்கார் 54 ரன்னும், முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர்.

    இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திடம் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. கடந்த 7-ம் தேதி நடந்த ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டில் வீழ்த்தியது.

    நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம்- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி 17-ம் தேதி நடக்கிறது. இதில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வாலின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ அணி. #EnglandTriseries #INDAvWIA
    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ஏ அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சந்தர்பால் ஹேமராஜ் 45 ரன்களும், ஜேசன் மொகமது 31 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.

    இந்திய வீரர்களின் துல்லிய பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சிக்கினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் தாமஸ் 64 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ஏ அணி சார்பில் தீபக் சஹார் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரக இறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 102 ரன்களில் அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஷுப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார். 
     
    இறுதியில், இந்தியா ஏ அணி 38.1 ஓவரில் 222 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில், நிக் கபின்சின் சிறப்பான சதத்தால் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ் அணி. #EnglandTriseries #EnglandLions #IndiaA
    லண்டன்:

    இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்தியா ஏ அணி சார்பில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 55 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களுடனும், ஷுபமன் கில் 37 ரன்களுடனும் வெளியேறினர்.



    மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இந்தியா ஏ அணி 46.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
     
    இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் லியாம் டாசன் 4 விக்கெட்டுகளும், டாம் ஹெல்ம் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய நிக் கபின்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு சாம் ஹைன் ஒத்துழைப்பு தந்து அரை சதமடித்து 54 ரன்களில் அவுட்டானார்.

    இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிக் கபின்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா ஏ சார்பில் ஷ்ர்துல் தாகுர் 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #EnglandTriseries #EnglandLions #IndiaA
    ×